Friday, May 23, 2008

தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு நல்ல முடிவு எடுத்தார்.அது என்னவென்றால் அவர் கட்சியை சார்ந்த ஒரு சட்ட மன்ற உறுப்பினர்,சமூக நலத்துறை அமைச்சர் திருமதி.ஆலடி அருணா அவர்களின் பதவியை பறித்தது.அமைச்சர் பதவியை பறிக்கும் அளவுக்கு அவர் என்ன பெரிய தவறு செய்து விட்டார்?.அமைச்சரை பொறுத்த வரையில் அவர் செய்தது ஒன்றும் பெரிய குற்றமில்லை.அந்த வகையில் பார்த்தால் அவர் கட்சியை சார்ந்த மத்திய அமைச்சர் திரு.பாலு செய்த பகிரங்க குற்றத்தை விட இது சாதரமானது.

திரு.T.R.பாலு செய்த குற்றத்தை பத்திரிகைகளும் எதிர் கட்சிகளும் விமர்சனம் செய்த போதிலும் அவர் வருத்தம் அடைந்ததாக தெரிவில்லை.அப்படி இருப்பதுதான் அவர்கள் கட்சியின் பண்பு,இந்திய
ஜனநாயகத்தின் முறை.தேர்ந்தெடுத்த மக்களின் கடமை இதை வேடிக்கை பார்க்க வேண்டியது.

திருமதி.ஆலடி அருணா செய்த குற்றம் "அவர் உறவினர் ஒருவர் லஞ்சம் வாங்கிய குற்ற வழக்கிலிருந்து அவரை காப்பாற்ற முயற்சி செய்தது.திரு.T.R.பாலு அவர்கள் செய்த குற்றம் என்னவென்றால் அவர்கள் குடும்பத்தை சார்ந்த ஒரு தொழில் நிறுவனத்தை காப்பாற்ற பிரதம மந்திரியிடமும்,மற்றும் அந்த தொழில் சார்ந்த மத்திய அமைச்சரிடமும் எந்த ஒரு வெட்கமும் இல்லாமல் வெளிப்படையாக கோரிக்கை வைக்கிறார்.இதை எதிர் கட்சிகள் விமர்சனம் செய்த போது,பகிரங்கமாக ஒப்பு கொண்டதோடு இல்லாமல் தான் செய்தது தவறு இல்லை என்றும் வாதிடுகிறார்.இதை பற்றி அவர் கட்சி தலைவர் கருணாநிதி ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.இதுதான் திராவிட கட்சிகளின்,கருணாநிதியின் குணம்.

சரி,திருமதி.ஆலடி அருணா தான் செய்த குற்றம் பத்திரிக்கைகளில் வெளிவந்தவுடன்,வெட்கம் அடைந்து ராஜினாமா செய்து விட்டார்.அப்படியென்றால் திரு T.R.பாலு அவர்களிற்கு வெட்கம்,மானம்,சூடு,சொரணை எதுவும் இல்லாமல்தான் ராஜினாமா செய்யாமல் இருக்கிறாரா?.இல்லை தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி என்று தன் தலைவர் கருணாநிதியின் valiyai pinpattrukirar .






















No comments: